புதன், 3 ஜூன், 2009

இயக்குனர் VS நடிகை , விமர்சன சண்டை


இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கும், பிரபல நடிகையும் ,தனியார் தொலைக்காட்சி ஒன்றில் திரைவிமர்சனம் நிகழ்ச்சியை வழங்கி வரும் சுஹாசினிக்கும் புதிதாக மோதல் எழுந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளிவந்த, ஷக்தி சிதம்பரம் இயக்கி, ராகவா லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படத்தை சுஹாசினி மிகவும் மோசமாக விமர்சனம் செய்ததே இதற்குக் காரணம். இன்னும் சொல்லப்போனால் சுஹாசினி அந்த படத்தைப் பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே சென்று விட்டதாக ஒரு தகவல். அப்படி பாதி படத்தை மட்டுமே பார்த்த சுஹாசினி அப்படி ஒரு விமர்சனம் செய்தது தவறான ஒன்று.


பொதுவாகவே அந்த நிகழ்ச்சியில் சுஹாசினி கொஞ்சம் மோதாவித்தனத்துடன்தான் நடந்து கொள்வார். ஏதோ திரைப்படங்களைப் பற்றி கரைத்துக் குடித்தவர் போலத்தான் பேசுவார். சில வாரங்களுக்கு முன் கூட கார்த்திக் அனிதா படத்தில் நடித்த ஹீரோயினை கேரளாவில் இருந்து அழைத்து வந்தது, வேஸ்ட் என சொன்னார். இவர் அறிமுகமான படங்களில் எல்லாம் எப்படி இருந்தார் என்பது நமக்குத் தெரியாதா.


பதிலுக்கு ஷக்தி சிதம்பரமும் சுஹாசினியை தாக்கி பேட்டி கொடுத்திருக்கிறார். கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கல் எறிகிறார் என்று சொல்லியிருக்கிறார். வேறு எதுவும் நேரடியாகத் தாக்காமல் சுஹாசனியின் கணவரான மணிரத்னத்தின் படங்களைப் பற்றி தாக்கியிருக்கிறார். தகராறு சுஹாசினிக்கும் ஷக்திக்கும்தான். அப்படியிருக்க ஷக்தி மணிரத்னத்தை தாக்குவது தேவையில்லாத ஒன்று. ராமாயண, மகாபாராதக் கதைகளை மணிரத்னம் காப்பியடித்து இயக்குவதாகக் கூறியிருக்கிறார். மணிரத்னம் சொந்தமாக எந்த கதையை எழுதி எடுத்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.


விமர்சனம் என்ற பெயரில் தேவையில்லாத வார்த்தைகளைக் கூறுவது இப்போது வாடிக்கையாகி விட்ட ஒன்று. எப்படியோ கொஞ்ச நாளைக்கு இந்த சண்டையை வேடிக்கை பார்க்கலாம்.




3 கருத்துகள்:

venkatesh சொன்னது…

மணி ரத்னத்தை பற்றி பேச சக்தி சிதம்பரம் அருகதையற்றவர்...

butterfly Surya சொன்னது…

அந்த நிகழ்ச்சியும் பார்த்தேன். சுஹாசினி சரியாகத்தான் சொன்னார்.

அருமை நண்பர் கேபிள் சங்கர் இந்த படம் பற்றி:

இயக்குனர் சக்தி சிதம்பரம் தான் ஒரு பின்நவீனத்துவ இயக்குனர் என்பதை காட்சிக்கு காட்சி த்ன்னுடய் செக்ஸியான காட்சியமைப்பினாலும், லாஜிக்கே இல்லாத திரைக்கதையாலும், டபுள் மீனீங் வசனங்களிலாலும், படத்தில் வரும் ஹீரோயின்களின் மாராப்புகளை ஒன் சைட் ஓப்பனாய் காட்டி மாராப்புக்கு பின் என்ன என்பதை பின் நவீனத்துவ முறையில் இயக்கி பின்னி பெடலெடுத்திருக்கிறார்.


என்ன எழவுடா.. எனக்கே ஒண்ணும் புரியல..

Link:

http://cablesankar.blogspot.com/2009/05/blog-post_19.html

goma சொன்னது…

....பொதுவாகவே அந்த நிகழ்ச்சியில் சுஹாசினி கொஞ்சம் மோதாவித்தனத்துடன்தான் நடந்து கொள்வார். ஏதோ திரைப்படங்களைப் பற்றி கரைத்துக் குடித்தவர் போலத்தான் பேசுவார். .....

-----
வழிமொழிகிறேன்