.jpg)

பேப்பர்ல வௌம்பரத்தலாம் பார்த்து மிரசலாயி சும்மா அஸத்த போறாங்கன்னு பார்த்தா, ராமாயணத்த எழுதன வால்மீகி பேர வச்சிட்டு, நம்ம கதைய கொடுத்திருக்காங்கப்பா.
அது ஒண்ணுமில்ல, ஒரே வரில சொல்லிடலாம்பா படத்தோட கதைய. ஒரு பிக்பாக்கெட் திருடன, ஒரு பொண்ணு திருத்த நினைக்கிறா, இதாம்ப படத்தோட கதையே. படம் பாக்கச் சொல்ல தேவையில்லாம இந்த ஆனந்த விகடன் எல்லா படத்துக்கும் மார்க்கு போடுவாங்களே, அது ஞாபகம் வந்துச்சுப்பா. அப்பதான் புரின்ச்சி. மார்க் போடுறது ஈஸி. படிக்கிறது கஷ்டம்பா. (அதாவது படம் எடுக்கிறது). படத்தோட டைரக்டரு, நம்ம சிவாஜி ஷங்கர் கிட்ட தொழில் கத்துக்கனவராம்பா. அவராட்டம் மிரசலா எடுக்கத் தெரியலப்பா. நல்லாத்தான் கதைய யோசிச்சிருககாரு, ஆனால் பெண்டான வீல் கணக்கா திரைக்கதை போயிடுச்சிப்பா.
படத்தோட ஹீரோ பேரு அகில். கல்லூரி படத்துல அறிமுகமானரே அவரு. பாண்டி கேரக்டர்ல கரீட்டாதான் நடிச்சிருக்காருப்பா. அச்சு அசல் லோக்கல் பிக்பாக்கெட் மாதிரியே கீறாரு. அதுக்கே நூத்துக்கு எண்பது மார்க் போட்டுடலாம்பா.
ஹீரோயினியா ரெண்டு பேரு, படம் பாக்கும் போதுதான் பேர கேட்டுக்குட்டன்பா. ஒரு பொண்ணு மீரா நந்தன். இன்னொரு பொண்ணு தேவிகா. இவங்களை பாக்கச் சொல்ல நம்ம உஷா அக்கா(சிம்பு அம்மா, அண்ணன் டிஆர் சம்சாரம்) சினிமால ஹீரோயினா நடிக்கும் போது எப்படி இருந்தாங்களோ அப்படி கீறாங்கப்பா. மீரா நந்தன், கேரக்டர பாக்கும் போது சிரிப்பா வருதுப்பா. நம்ம தமிழ் சினிமால படிச்ச பொண்ணுங்களுக்குலாம் காதலிக்கிறதுக்கு நல்ல பையனே கிடைக்கிறதில்லப்பா. ஒண்ணு பொறுக்கிய காதலிக்கிறாங்க, இல்ல திருடன காதலிக்கிறாங்க, இல்ல பிக்பாக்கெட்ட காதலிக்கிறாங்க. படிச்ச கம்ப்யூட்டர் இஞ்சினியர் யாருமே கிடைக்க மாட்ங்கிறாங்கப்பா. ரெண்டு பேர பத்தியும் என்னாத்த சொல்றது.
நம்ம ராஜா, என்னடா பாண்டி பாட்ட தமாசா பாடியிருக்காருப்பா.
படத்துல காமெடி இல்ல, பைட்டு இல்ல, மேட்டர் பாட்டு இல்ல, பார்க்க அழகா யாரும் இல்ல, இப்படி எத்தனையோ இல்ல.....
புதிய பாதை போட நினைச்சி பழைய பாதையை போட்டுட்டாங்கப்பா.
விகடன்தான் எல்லாருக்கும் மார்க்கு போடுவாங்க, இப்ப நம்ம டேர்ன், நாம எல்லாரும் மார்க் போடுவோம்பா...
என் மார்க் 3௦0/100
பின்குறிப்பு- படம் முழுக்க சென்னைத் தமிழ் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு நானும் சென்னைத் தமிழிலேயே எழுதிவிட்டேன். புரியாதவர்கள் மன்னிக்கவும்.
புதிய பாதை போட நினைச்சி பழைய பாதையை போட்டுட்டாங்கப்பா.
விகடன்தான் எல்லாருக்கும் மார்க்கு போடுவாங்க, இப்ப நம்ம டேர்ன், நாம எல்லாரும் மார்க் போடுவோம்பா...
என் மார்க் 3௦0/100
பின்குறிப்பு- படம் முழுக்க சென்னைத் தமிழ் என்பதால், ஒரு வித்தியாசத்துக்கு நானும் சென்னைத் தமிழிலேயே எழுதிவிட்டேன். புரியாதவர்கள் மன்னிக்கவும்.
7 கருத்துகள்:
மெர்சலாகீதுப்பா விமர்சனம்
//ஆனால் பெண்டான வீல் கணக்கா திரைக்கதை போயிடுச்சிப்பா. //
:-)
சென்னை பாஷை சூப்பரு
உஸாரு பண்ணதுக்கு தேங்க்ஸ் பா
பெயிலா?
யாரு இசை? இளையராஜாவா?
அத பத்தி ஒன்னியுமே சொல்லலியே?
சரவண அண்ணாத்தே, அதான் ராஜா தமாசா பாடியிருக்கிறாரேன்னு சொல்லிருக்கேனே, இளையராசான்னு சொன்னாதான் புர்யுமா ?
சூப்பர் பா ;) அட பாஷயை சொன்னே படத்தை இல்லை
கருத்துரையிடுக