செவ்வாய், 16 ஜூன், 2009

இதுதான் கலாச்சாரமா ?







திரைப்பட விழாக்களில் நம் நடிகைகள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்க்கும் போது, நம் கலாச்சாரம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. சமீப காலமாக அவர்கள் அணிந்து வரும் ஆடைகளைப் பார்த்தால் ஆஆஆஆஆவெனப் (பார்க்கத் தூண்டுகிறது) என நினைக்க வேண்டாம், ஆ வென ஆத்திரப்பட வைக்கிறது. அவரவர் வீட்டுக்குள் எப்படி வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும். பொது இடங்களில் விழாக்களுக்கு வரும் போது குறையில்லாத நிறைவான உடை அணிந்து வந்தால் என்ன ? தங்களை பலர் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படி வருகிறார்களா, அல்லது தாங்களும் அழகுதான் என காட்டிக் கொள்வதற்காக வருகிறார்களா எனத் தெரியவில்லை. குறிப்பாக வட இந்திய நடிகைகள்தான் இப்படி வருகிறார்கள் என்று பார்த்தால் நம்ம ஊர் நடிகைகள் கூடி புடவையிலும் கவர்ச்சியாக வருகிறார்கள்.
புகைப்படக் கலைஞர்களுக்கு நடிகைகள் இப்படி வருவதுதான் ஒரு கொண்டாட்டமே(?) . அப்போது நடக்கும் தள்ளு முள்ளுகளை நீங்கள் பார்க்க வேண்டுமே. அப்படிப்பட்ட படங்களைத்தான் நம்மவர்களும் விரும்பிப் பார்ப்பார்கள் என சொல்லப்படுவது ஒரு காரணம்தான்.
அரை குறை ஆடையைப் பற்றி எழுதி விட்டு, புகைப்படத்தையும் வெளியிட்டது நியாயமா என நீங்கள் கேட்டால், உங்களின் ஓட்டுக்களின் படி நான் அதை பிறகு நீக்கி விடுகிறேன். பின்னூட்டத்தில் உங்கள் கருக்துக்களை வெளியிடுங்கள். அப்படியே கருத்துக் கணிப்பிலும் உங்கள் வாக்குகளை பதிவு செய்யுங்கள்.

3 கருத்துகள்:

வான்முகிலன் சொன்னது…

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு வந்தாங்கன்னு இப்டி எழுதுறீங்களே... படத்துல நடிச்சா மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேங்குறீங்க... என்னங்க ஒங்க நியாயம்?

kavi சொன்னது…

படத்துல நடிக்கிறதுக்கும் நேர்ல வர்றதுக்கும் வித்தியாசமில்லையா, அப்ப நிஜமும் , நிழலும் ஒன்னா உங்களுக்கு ?

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

வயசானாலே இப்படித்தான் தல..,