திங்கள், 15 ஜூன், 2009

தோனி செய்தது நியாயமா ?

நேற்றைய டி௨0 மேட்ச்சில் இந்தியா தோற்றது என்னை மிகவும் பாதிப்படைய வைத்து விட்டது. முதல் டி௨0 உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு அரை இறுதியில் ஆடக்கூட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம் என சொல்ல முடியாது. தெரிந்தே செய்த தவறுதான் என்று சொல்ல வேண்டும். அதிலும் சமீப காலமாக, சில வருடங்களாக எட்டிப் பார்க்காத அரசியல் இந்திய அணியில் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டது. சில இன்னிங்சில் சிறப்பாக ஆடினார் என்பதற்காக சேவாக், யுவராஜ் போன்ற சீனியர்களை எல்லாம் ஓரம் கட்டி விட்டு தோனியை கேப்டான ஆக்கியது மிகப் பெரும் தவறு. சிறந்த வீரர்களான அவர்களுக்கு தோனி எப்படிப்பட்ட மரியாதையைக் கொடுக்கிறார் என்பது இப்போது சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறது. அதிலும் சேவாக்கை காயம் காரணமாக அணியை விட்டு திடீரென நீக்கியதும் மாபெரும தவறு. அதை மறைப்பதற்காக தோல்விக்கு பின்னர் அளித்த பேட்டியில் சேவாக் இல்லாததும் ஒரு காரணம் என சொல்லியிருக்கிறார். அப்படியென்றால் ஆடிய பதினோரு வீரர்கள் என்ன ஆடினார்கள்.

இந்தியாவைப் பொருத்தவரையில் வெற்றியடைந்தால் தூக்கிக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஐபிஎல் போட்டிகளிலேயே இந்திய வீரர்கள் யாரும் சிறப்பாக ஆடவில்லை, ஆர்பி சிங்கைத் தவிர. ஒரு உலகக் போப்பை போட்டிக்கு முன்பாக நீண்ட நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை நடத்தியதே ஒரு மாபெரும் தவறு. பார்மில் இல்லாத வீரர்களுடன், ஐபிஎல் ஆடி களைப்படைந்த வீரர்களுடன் ஒரு உலகக் கோப்பை போட்டியில் பங்கு பெற்றதும் தவறான ஒன்றாகும். உலகக் போப்பையையும், தேர்தலையும் காரணமாக வைத்து இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியையே நடத்தாமல் விட்டிருக்கலாம். இப்போது யாருக்கு நட்டம் ? இந்திய அணிக்குத்தானே.

இங்கிலாந்திற்கு எதிராக டாஸ் ஜெயித்த பின் நாம் பேட்டிங் செய்யாமல் விட்டது ஒரு தவறு, பின்னர் ஒரு முக்கியமான வாழ்வா சாவா போட்டியில் கத்துக்குட்டியான ரவீந்தர ஜடேஜாவை முன்னால் ஆட வைத்ததும் ஒரு மாபெரும் தவறு.

விளையாட்டிற்கு முன்னுரிமை அளித்த காலம் போய் தற்போது வேறு எவற்றிற்கோ முன்னுரிமை அளிக்கும் காலம் வந்துவிட்டது.

பார்மில் இல்லாத வீரர்களுக்கு முதலில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும். எந்த விதமான அரசியல் விஷயங்களும் வீரர்களுக்குள் வராமல் பார்த்துக கொள்ள வேண்டும்.

வேலை வெட்டியை விட்டு கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களை இனியாவது இவர்கள் ஏமாற்றாமல் இருப்பார்களா ?

3 கருத்துகள்:

Vishnu - விஷ்ணு சொன்னது…

// இந்தியாவைப் பொருத்தவரையில் வெற்றியடைந்தால் தூக்கிக் கொண்டாடுவதும், தோல்வியடைந்தால் தூற்றுவதும் வாடிக்கையான ஒன்றுதான். //

இந்திய அணி எப்பொழுது வெற்றி அடைய வேண்டும் என்ற மித மிஞ்சிய எண்ணங்கள் இந்த வகை செயலை செய்ய தூண்டுகிறது.

குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

நண்பரே...
நானும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்...

பெயரில்லா சொன்னது…

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகியுள்ளது


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html