கொஞ்ச நாளாக ஓய்ந்து போயிருந்த ராஜா ரஹ்மானைப் பற்றிய ஒப்பீடு மீண்டும் தேவையில்லாமல் வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இசைஞானி அவர்களின் இசையைப் பற்றிப் பேச யாருக்கும் தகுதியில்லை. விமர்சனம் என்ற பெயரால் ஒருவரது திறமையைப் பற்றி தேவையற்ற விவாதம் செய்யக் கூடாது என்பதே என் கருத்து. திறமையை அளவிடுவதற்கு எது அளவுகோல். இவை ஒன்றும் பள்ளிக்கூடங்களில் நடத்தும் பரீட்சையல்ல, திறமையை அளவிடுவதற்கு.
10வருடங்களில் 100படங்களுக்கு இசையமைத்தும், அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமான ஒரு விருதை வாங்குவதும் பெரிய விஷயமல்ல. மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பெறுவதே மிகப் பெரும் விருது. அன்று முதல் இன்று வரை இளையராஜா அவர்களின் பாடல்கள் ஒலிக்காத வானொலிகளும் இல்லை, ஒளிக்காத தொலைக்காட்சிகளும் இல்லை.
இந்திப் படங்களுக்கு இசையமைத்து விட்டு இந்திய அளவில் பெயர் வாங்குவதும், ஆங்கிலப் படங்களுக்கு இசையமைத்து விட்டு பெயர் வாங்குவதும், பெரிய விஷயமில்லை.
எந்த விதமான பின்னணியும் இல்லாமல், எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இந்த அளவிற்கு பெயர் வாங்குவது முக்கியமான விஷயம்.
தயவு செய்து இனிமேலாவது இசைஞானியின் இசையப் பற்றி ஏதும் விவாதிக்காமல் இருப்பது நல்லது என பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
9 கருத்துகள்:
ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று கூறி விட்டு நீங்களே ... 10 வருடங்களில் 100 படம் ...என புள்ளிவிபரக்கணக்குகள் சொல்லி ஒப்புடுகிறிர்களே ????
இளையராஜா திறமையானவர்தான்.... அவருடையா திறமையை ஒப்பிட முடியாதுதான் ...
ஆனால் இளையாராஜா உலக அளவில் பிரகாசிக்காததுக்கு... அவருடையா தலைக்கனம் தான் மிகப்பெரிய காரணம்.. அதை அவரே பல மேடைகளில் வெளிபடுத்தி இருக்கிறார்... சமிபத்தில் நடந்த சம்பவம் கூட இதற்கு சாட்ச்சி..
ரஹ்மான் உலகத்தமிழரின் அடையாளம் .
நன்றாகச் சொன்னீர்கள் சிலருக்கு இளையராஜாவைத் திட்டாவிட்டால் மனம் குளிராது. குறிப்பாக ஸ்ரீல்ங்காவில் இருக்கும் சில இளவட்டங்களுக்கு ஏனோ இளையராஜாவை பிடிப்பதேயில்லை இதற்க்கு காரணம் இங்கேயுள்ள சில தனியார் வானொலிகள் தான் தேவையில்லாமல் சில காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர்களைத் தூக்கிப்பிடித்துவைப்பார்கள்.
இவர்கள் என்றைக்காவது அந்திமழை பொழிகிறது கேட்டிருப்பார்களா? இல்லை காதல் கவிதைகள் என கோபுர வாசலில் நனைந்திருப்பார்களா? ஆகாய கங்கையில் குளிர்த்திருப்பார்களா? ராஜா என்றைக்கும் ராஜா தான்.
சில நாய்கள் நிலவைப்பார்த்துக் குரைப்பதைப்போல் குரைத்துவிட்டுபோகட்டும் இதனால் நிலவுக்கு என்றைக்கும் கலங்கம் இல்லை.
\\ரஹ்மான் உலகத்தமிழரின் அடையாளம் .//
இருங்கப்பு.. சிரிச்சு முடிச்சிட்டு வரேன்.
என்னாங்கடா.. கேக்குறவன் கேனயனா இருந்தா எரும எரோபிலன் ஓட்டுதுன்னு உடுவிங்க போல.
ரஹ்மான் ஒரு காபி மன்னன் அவ்வளவே.
Ilayaraja is a head-weight person. He thinks he is the only genius in the world. He forgot to think that the is the genius for a particular period, but cannot be forever. ARR is also a genius for a period, he also cannot be a genius in music forever. This is a cycle. No one has to raise their flag for Ilayaraja or ARR. Both are good.
இசை மட்டுமே ரசிக்கபட வேண்டும். இசையமைப்பாளரின் தனிமனித நடவடிக்கை ஒதுக்கப்படவேண்டும். அந்த அறிவு இல்லாத யாரும் விமர்ச்சிக்க தகுதி அற்றவர்கள்
விட்டுருங்க நண்பரே.. யார் என்ன வேணாலும் சொல்லிக்கட்டும்...
நமக்கு ராஜா இருக்காரு, அவர் பாட்டு இருக்கு அது போதும்...அதைக் கேட்டு ரசிக்கிறதுக்கே நமக்கு நேரம் பத்த மாட்டேங்குது...
ஒரு ராஜா ரசிகனாய் எனது கருத்தைப் பதிந்திருக்கிறேன்..தவறெனில் மன்னிக்க,..
Mr .Rajendram ....
//குறிப்பாக ஸ்ரீல்ங்காவில் இருக்கும் சில இளவட்டங்களுக்கு ஏனோ இளையராஜாவை பிடிப்பதேயில்லை இதற்க்கு காரணம் இங்கேயுள்ள சில தனியார் வானொலிகள் தான் தேவையில்லாமல் சில காப்பி பேஸ்ட் இசையமைப்பாளர்களைத் தூக்கிப்பிடித்துவைப்பார்கள்//
நான் இலங்கையிலதான் இருக்கன் ... இங்க உள்ள தனியார் வானொலிகளை நீங்கள் கேட்டிருந்தா இப்படி சொல்ல மாட்டிங்க ... உங்க இளையராஜா ட பிறந்த தினத்துகாக இந்த வாரம் முழுவதும் இரவு நேரங்களில் அவரது பாடல்களை மட்டுமே ஒளிபரப்புகிறார்கள்... ம்ம்ம்ம் அது தெரியாமல் பேசக்கூடாது... சரியா???
//இவர்கள் என்றைக்காவது அந்திமழை பொழிகிறது கேட்டிருப்பார்களா? இல்லை காதல் கவிதைகள் என கோபுர வாசலில் நனைந்திருப்பார்களா? ஆகாய கங்கையில் குளிர்த்திருப்பார்களா? //
எனக்கு 23 வயசு ... உங்களுக்கு இளையராஜாவின் எந்த பாடல் வேண்டும் என்டு சொல்லுங்கள் நான் தருகிறேன்... அந்த அளவிற்க்கு என்னிடம் அவரது பாடல் தொகுப்பே உள்ளது... நீங்கள் சொன்ன "அந்திமழைய்யும்" கேட்டிருக்கிருக்குறேன், " காதல் கவிதைகளிலும்" நனைந்திருக்கிறேன், "ஆகாய கங்கையிலும்" குளித்திருக்கிறேன் ... சரியா ஏதோ உங்களுக்குதான் ரசனை உள்ளது என்டு சப்பகட்டு கட்டதீர்கள்.....
wht u say rahman is tamil identy.stupid im not that type tamil.
ILAYA RAAJA THIRAMAI VAAINTHAVAR THAAN/NALLA PALA PAADALHALAI THANTHAVARTHAAN MURUKKAVILLAI.AANAAL AVAR ORUVARTHAAN ISAIKKE GAANI AVARAITHTHAVIRA VERU YAARUM ILLAI ENDRU PITHARTRUM UNGALAI PONDRAVARKALAAL THAAN AVAR SIRUMAI ADAIKIRAAR.ULAHA ALAVIL PIRAKAASIKKA VENDUMAANAAL ATHARKKU SILA NGAANAM VENDUM.ATHU RASAIYAAVIDAM ILLAI ILLAI ENDRU ADITHTHU KOORALAAM.
கருத்துரையிடுக