என்னுடைய பல நாள், அல்ல பல வருடக் கனவு, இசைஞானி இளையராஜா அவர்களை சந்தித்துப் பேச வேண்டும் என்பது. அந்த கனவு இன்று நனவானது. அந்த நிமிடத்தை என்னால் நிச்சயம் மறக்கவே முடியாது. பல விழாக்களில் அவரை நேரில் பார்த்திருந்தாலும் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததே இல்லை. ஆனால் இன்று அந்த குறைகள் அனைத்தும் பறந்து போய் விட்டன. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற போது, ஒரு மாபெரும் திறமைசாலியை நாமும் நெருக்கத்தில் சந்தித்து விட்டோம் என்ற மகிழ்ச்சி அலை பாய்ந்தது. அவரை சந்தித்த அந்த ஐந்து நிமிடங்களை என் மனதுக்குள் அப்படியே வைத்து பூட்டி விட்டேன். எனக்குள் ஏற்பட்ட பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஆயிரம் சொல்லுங்கள் இசை என்றால் இளையராஜா தான், இளையராஜா மட்டும்தான்.
6 கருத்துகள்:
raakathevan avar! vazhthukkal...
avarukku piranthanal vazhthukkal.
கொடுத்து வைத்தவர் நீங்கள்...
வாழ்த்துக்கள்
மகேஷ், தமிழ்ப்பறவை, சரவணகுமரன், அனைவருக்கும் நன்றி .
//அவரை சந்தித்த அந்த ஐந்து நிமிடங்களை //
அந்த ஐந்து நிமிடங்கள் என்னதான் நடந்தது...கொஞ்சம் விவரித்து சொல்லுங்களேன்
திரை இசை என நான் கேட்க ஆரம்பித்தது இசைஞானியின் பாடல்களைத்தான். ஏறக்குறைய 30 வருட கனவு, நனவாகும் போது, சந்திக்கும் நிமிடங்கள், மிகவும் வேகமாக சென்றது போன்ற ஒரு உணர்வு. இன்னும் கொஞ்சம் நேரம் பேசமாட்டோமா என்ற ஒரு ஏக்கம். இருந்தும் சில வார்த்தைகள் மட்டுமே வாயிலிருந்து வந்தது, அவரை சந்தித்த ஒரு அதிர்ச்சியிலேயே இருந்தேன். அதனால்தான் அந்த ஐந்து நிமிடங்களை விரிவாக சொல்ல முடியவில்லை. அதற்கு வார்த்தைகள் போட்டு நிரப்ப முடியாது. மன்னித்து விடுங்கள். நன்றி ராஜ்.
கருத்துரையிடுக