பொக்கிஷம் திரைப்படம் ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நாற்பத்தைந்து நிமிடங்களாக இருந்தது. நேற்று இந்த நீளம் குறைக்கப்பட்டது. ஏறக்குறைய 20 நிமிடங்களுக்கு மேல் படத்தின் சில தேவையற்ற காட்சிகளை குறைத்திருக்கிறார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள பல சிறிய பாடல்களும், கதைக்கு தேவையில்லாத சில காட்சிகளும் நீக்கப்பட்டு விட்டன. இதை இயக்குனர் சேரனே தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையான ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று கலைஞர் தொலைக்காட்சியிலும், இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பில் பங்கு பெற்ற சேரன், படத்திற்குண்டான வரவேற்பு போகப் போக அதிகரிக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மசாலாத்தனமான படங்களையே பார்த்துப் பழகிப் போன நமக்கு, பசங்க, நாடடோடிகள், பொக்கிஷம் மாதிரியான படங்கள்தான் பொக்கிஷமாக அமையும் என்பது உண்மையான திரைப்பட ரசிகர்களின் எதிர்பார்ப்பு. விமர்சனம் என்ற பெயரில் பிளாக்குகளில் எழுதுபவர்கள் ஒரு வரைமுறை இல்லாமல், என்ன வேண்டுமானால் எழுதலாம் என நினைப்பது தவறான ஒன்று.
மூத்த பதிவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் விமர்சனத்தை நானும் படித்தேன். அவர்கள் சேரனின் நடிப்பை மிகவும் குறை கூறியிருந்தார்கள். பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயங்கும் போது பாவம் அவர் என்ன மட்டும் என்ன செய்வார், இப்படித்தான் ஆட்டோகிராப் படத்திற்கும், விக்ரம், விஜய், பிரபுதேவா போன்ற நடிகர்கள் நடிக்க முன்வரவில்லை. அதன் பின்தான் சேரனே அந்த படத்தின் நாயகனாக நடித்தார். அது இந்த படத்திற்கும் நடந்திருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க மறுத்திருக்கின்றனர்.
இன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு நேயரின் கேள்விக்கு பதிலளிக்கும் போது சேரன் இந்த ஆதங்கத்தை தெரித்திருந்தார். விஜய் போன்ற நடிகர்கள் நடித்திருந்தால் இந்த படத்திற்கான வரவேற்பும், வெற்றியும் பிரமாதமாக அமைந்திருக்கும் என குறைபட்டுக் கொண்டிருந்தார்.
நம் மூத்த பதிவர்கள், அப்படிப்பட்ட முன்னணி ஹீரோக்களுக்கு எது நல்ல படம், எது மசாலாப்படம் என புரிய வைத்து இம்மாதிரியான படங்களில் அவர்கள் நடிப்பதற்கு கால்ஷீட் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் கருத்து.
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என கண்டபடி விமர்சனம் எழுதுவதை தயவு செய்து குறைத்துக் கொள்ளுங்கள் என் அன்பான மூத்த பதிவர்களே.
சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும்.
படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டு, பின்னர் குறைக்கப்பட்ட ஆட்டோகிராப், மாபெரும் வெற்றி பெற்றது. அது போல இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கலாம்.
38 கருத்துகள்:
சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும்.
உண்மை தான் இயக்குனர் என்கின்ற பார்வையில்.
good post ,voted,keep it up
சேரன் ஒரு நல்ல இயக்குனர் என்றாலும், நடிகன் என்ற முறையில் அவர் இன்னும் தேற வேண்டியிருக்கிறது. (அழகு என்று பார்த்தால், இதை விட கொடூரமான மூஞ்சிகளைப் பார்த்து பழகி விட்ட நமக்கு, சேரன் 6/10 என்று தேறி விடுவார்)
ஆபாசக் காட்சிகளையோ, ஆபாச நகைச்சுவையோ இல்லாத திரைப்படங்களை வழங்கியவர் என்ற முறையில் சேரனைப் பாராட்டியே தீர வேண்டும்.
Avar yen pudhu muhangalai aaimuga padutha koodathu?subramaniyapuram hero kkalukku periya openning irundhucha yenna?periya herokkal nadikka maruthadha solrathu oru saakku...avlodhan...Oru Nalla iyakkunar ippadi thanaketra padangalga seivadhu avardhu creativity baathikkum.
-UM.Krish
படம் டிரிம் செய்யபட்டு இன்னும் கோரமாய் துண்டு துண்டாய் இருக்கிறது என்பதை..தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
சேரன் மீது எந்த விதமான காழ்புணர்ச்சியும் எனக்கு இல்லை. அவரின் நடிப்பு பற்றிய கருத்தைதவிர..
நீங்கள் சொல்வதை பார்த்தால் ஏதோ சேரன் ம்ட்டும் தான் தமிழ் சினிமாவை தாங்கி கொண்டிருப்பதாய் சொல்வது போல் உள்ளது.. அதை மறுபரிசீலக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
/Avar yen pudhu muhangalai aaimuga padutha koodathu?subramaniyapuram hero kkalukku periya openning irundhucha yenna?periya herokkal nadikka maruthadha solrathu oru saakku...avlodhan...Oru Nalla iyakkunar ippadi thanaketra padangalga seivadhu avardhu creativity baathikkum.//
இதையும் ரிப்பீட்டுகிறேன்.
He can introduce new faces so that the new people have the chance to enter. If he thinks his movie is good then he should not seek no.1 heros. Like a blogger already told, movies got big success without having valued heros.
And another thing, is that it's very boring to see Chrean's pitiable face look. Just think of all of his movies. Almost same kind of expression.
I don't even want to watch his movies nowadays.
படைப்புதான் முக்கியம். படைபபளி அல்ல. சேரனாக இருந்தாலும், எந்த ஜாம்பவானாக இருந்தாலும் படம் நல்லா இல்லைன்னா ஒதுக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு சேரனுக்காக என்று சொல்லும்போது விஜய், அஜித் போன்ற விசிலடிச்சான் ரசிகரக்ளுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்?
இதுவரை எல்லா சேரன் படஙக்ளுக்கும் இது நேரிடுகிறது. ப்டம் வெளியாகும் முன்பே அதை குறைக்க மாட்டாரா? அடி வாங்கிய பின் தான் ட்ரிம் செய்வாரா? மேலும், தன் விருப்பபடிதான் பட்ம எடுப்பேன் என்று சேரம் சொல்லும் போது , நடிகரக்ளும் அவரவர் விருப்பபடிதான் படம் தேர்வ்ய் செய்வாரக்ள். ஸ்ரீகாந்த் இருக்கிறார், ஷாம் இன்னும் டஜன் நடிகர்கள் இவரிடம் நடிக்க காத்து கிடக்கிறார்கள். நினைவில் வைக்க சொல்லுங்கள் மேலும், இந்த பொக்கிஷம், கமல்ஹாசனே நடித்து இருந்தாலும் மொக்கை என்பது என் கருத்து..
//சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும்.//
நன்றி, என் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு,
//ஆபாசக் காட்சிகளையோ, ஆபாச நகைச்சுவையோ இல்லாத திரைப்படங்களை வழங்கியவர் என்ற முறையில் சேரனைப் பாராட்டியே தீர வேண்டும்//
இந்த ஒரு விஷயம் போதாதா ?
//நீங்கள் சொல்வதை பார்த்தால் ஏதோ சேரன் ம்ட்டும் தான் தமிழ் சினிமாவை தாங்கி கொண்டிருப்பதாய் சொல்வது போல் உள்ளது.. அதை மறுபரிசீலக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.//
//சேரன் மாதிரியான இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இல்லையென்றால் தமிழ் சினிமாவின் தரம் என்றோ தாழ்ந்து போயிருக்கும். //
சேரன் மட்டும்தான் தமிழ் சினிமாவைக் காப்பாற்றுகிறார் என நான் சொல்ல்வில்லை. அவர் மாதிரியான இயக்குனர்கள் என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.
உங்கள் கருத்துப்படி பார்த்தால் நடிகராக அவர் இன்னும் எவ்வளவோ பயணிக்க வேண்டியிருக்கிறது என்று நானும் ஏற்றுக் கொள்கிறேன். மற்றபடி இயக்குனர் சேரன், நிச்சயம் பாராட்டப்படிவேண்டியவர்தான்.
ஜாதிப் பிரச்சனையை முன்னிறுத்திய பாரதி கண்ணம்மா, ஊனமுற்ற பிரச்சனையை வெளிப்படுத்திய பொற்காலம், வெளிநாட்டில் வேலைபார்க்க ஆசைப்படும் நண்பர்களைப் பற்றிய வெற்றிக் கொடி கட்டு, கூட்டுக் குடும்ப வாழ்க்கையை வலியுறுத்திய பாண்டவர் பூமி, மறக்க முடியாத காதல் நினைவுகளை வலியுறுத்திய ஆட்டோகிராப், தந்தைப் பாசத்தை மையப்படுத்திய தவமாய் தவமிருந்து, இவையெல்லாம் உங்களுக்கு நல்ல படமாக படவி்ல்லையா, இன்றைய இளம் இயக்குனர்களில் இப்படிப்பட்ட நல்ல படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.
சேரனை விட மோசமாக நடிக்கும் எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்களே , அவர்களை இந்த அளவிற்கு நீங்கள் விமர்சிப்பீர்களா, தெரியவில்லை.
//He can introduce new faces so that the new people have the chance to enter.//
yes. your view is acceptable one.
thanks for commenting.
//அதை விட்டு விட்டு சேரனுக்காக என்று சொல்லும்போது விஜய், அஜித் போன்ற விசிலடிச்சான் ரசிகரக்ளுக்கும் உங்களுக்கு என்ன வித்தியாசம்?//
என்னை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், சில வருடங்கள் கழித்து இத்திரைப்படம், முழுமையான அங்கீகாரத்தைப் பெறும்.
நன்றி கார்த்திகேயன், தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
//பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கத் தயங்கும் போது பாவம் அவர் என்ன மட்டும் என்ன செய்வார்//
இது நொண்டி சாக்கு. திறமையுள்ள புதியவர்களை அறிமுக படுத்த வேண்டியதுதானே, நீங்கள் குறிப்பிட்டுள்ள பசங்க, நாடோடிகள் கூட புதியவர்கள் நடித்தது தான். சேரன் சிறந்த இயக்குனர், ONE OF THE WORST ACTOR IN TAMIL CINEMA. இது அவருக்கு தெரியுமா, இல்லை நாம நல்லா தான் நடிக்கிறோம் பாக்குறவனுக்கு தான் கண்ணு நொள்ளைன்னு நினைக்குறாறன்னு தெரியலை.
//சேரன் சிறந்த இயக்குனர், ONE OF THE WORST ACTOR IN TAMIL CINEMA. //
உங்கள் பார்வையில் நல்ல நடிகர்கள் யார் என்று ஒரு பட்டியல் இடுங்களேன்.ப்ளீச்சிங்,
வந்ததற்கு நன்றி.
என்னப்பொருதவரைக்கும் சேரனின் நடிப்பில் பெரிய குறை இருப்பதாகத் தெரியவில்லை.. குறிப்பாக 'சொல்ல மறந்த கதை'யில் அவரை விடச் சிறப்பாக, கண்டிப்பாக யாரும் நடித்திருக்க முடியவே முடியாது!! சேரன் மட்டுமில்லாமல் நம் புதிய இயக்குனர்களிடம் இருக்கும் முக்கியமான குறை.. தலைக்கனம்..!! இவர்கள் எல்லாம் நல்ல கதைகளயும் ஒரு சில நல்ல காட்சிகளையும் வெச்சு 2 1/2 மணி நேரம் தன்னால் படம் காட்ட முடியும் என்று 'திரைக்கதை' என்ற அதிமுக்கியமானதை குறைத்து மதிப்பிடுவதுதான் மிகவும் வருத்தமடைய வைக்கிறது..
""மூத்த பதிவர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலரின் விமர்சனத்தை நானும் படித்தேன். அவர்கள் சேரனின் நடிப்பை மிகவும் குறை கூறியிருந்தார்கள்""
இதை நான் வழிமொழிகிறேன்.. உங்களின் விமர்சனத்துக்கு நன்றி ..
ஒரு அருமையான படைப்புக்கு அவர்கள் பாராட்ட வேண்டம் பாடாவதியாக பதிவு போடாமல் இருந்தால் சரி. நல்ல வேளை நான் இதை எல்லாம் படிக்காமல் படம் பார்த்தேன். ஒருவேளை படித்து பார்த்து பார்க்காமல் விட்டு இருந்தால் நான் ஒரு அழகான படத்தை பார்கமலே இருந்து இருப்பேன் ..
பொக்கிஷம் நல்ல படங்தாங்க.....
//விஜய், அஜித் போன்ற விசிலடிச்சான் ரசிகரக்ளுக்கும் ?????//
யாரு இத சொல்லுறதுன்னு ஒரு வரைமுறை வேணாம்.... தியேட்டர்ல விசிலடிச்சி பாக்குறவங்க எல்லாம் , பதிவுல ஜால்ரா அடிகிரவங்களவிட எவ்வளவோ உசத்தியாக்கும்
ராஜா, அதுல நானும் ஒருத்தன் என்பது அறிந்ததே.. அதனால்த்தான் அவங்களும் இப்படி ஆக வேண்டாம்ன்னு சொன்னேன். நம்ம பிரச்ச்சினை இன்னொருத்தர் கடையில் வேண்டாமே..
////சேரன் சிறந்த இயக்குனர், ONE OF THE WORST ACTOR IN TAMIL CINEMA. //
உங்கள் பார்வையில் நல்ல நடிகர்கள் யார் என்று ஒரு பட்டியல் இடுங்களேன்.ப்ளீச்சிங்,//
to name a few ,ஜீவா,சூர்யா,பசுபதி,ஆர்யா,மாதவன்,பிருத்விராஜ். இவர்கள் எல்லாரும் இன்றைய தலைமுறை நடிகர்களே. அனுபவத்திலும் சேரனை விட பல மடங்கு கீழே இருப்பவர்கள். சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும், நடிப்பு என்னும் கலை கொஞ்சமாவது உடம்பில் ஒட்டியிருக்கனும் மெருகேத்துவதற்கு. அது சேரனுடம் சுத்தமா இல்லை. திரும்பவும் சொல்கிறேன் சேரன் திறமையான இயக்குனர் தான் மறுக்க வில்லை, ஆனால் நடிச்சு உயிரை வாங்குறதை தான் தாங்க முடியலை.
என் கதையில் நடிக்க கமலஹாசனும், விக்ரமும் மறுத்து விட்டார்கள் அதனால் தான் நான் நடிக்கிறேன்னு சொல்றது கேணைத்தனமா இருக்கு.
இப்பொ இருக்கும் இளம் இயக்குனர்களுக்கு இருக்கும் தைரியம் கூட சேரனுக்கு இல்லாம் இருப்பது வேதனை.
சென்னை 28, வெண்ணிலா கபடி, பசங்க, வெயில், சரோஜா, கல்லூரி, நாடோடிகள், சுப்ரமணியபுரம், பருத்தி வீரன் படமெல்லாம் பெரிய ஹீரோவை வைத்தா ஜெயித்தது? கதை நல்லா இருந்து அதை யார் நல்லா நடித்தாலும் ஓடும், குறைந்தது அங்கீகாரமாவது கிடைக்கும்.
Boss Thesiya geetham padatthai vittuteengale...
சூர்யா கூறியது...
//சேரன் மட்டுமில்லாமல் நம் புதிய இயக்குனர்களிடம் இருக்கும் முக்கியமான குறை.. தலைக்கனம்..!! //
வெற்றி பெற்றவர்களிடம் தலைக்கனம் இருப்பது தவறில்லை, நீங்கள் சொல்லும் தலைக்கனம் எது ?
//ஒரு அருமையான படைப்புக்கு அவர்கள் பாராட்ட வேண்டம் பாடாவதியாக பதிவு போடாமல் இருந்தால் சரி. நல்ல வேளை நான் இதை எல்லாம் படிக்காமல் படம் பார்த்தேன். ஒருவேளை படித்து பார்த்து பார்க்காமல் விட்டு இருந்தால் நான் ஒரு அழகான படத்தை பார்கமலே இருந்து இருப்பேன் ..//
உங்களுக்கும் எனக்கும் புரிந்தது அனைவருக்கும் புரிந்தால் நன்றாக இருக்கும்.
ராஜா, கார்க்கி, ஆரோக்கியமான சண்டைக்கு என் கடை நல்ல மேடையாக இருக்குமாயின் அது எனக்கு மகிழ்ச்சிதான்.
//to name a few ,ஜீவா,சூர்யா,பசுபதி,ஆர்யா,மாதவன்,பிருத்விராஜ். இவர்கள் எல்லாரும் இன்றைய தலைமுறை நடிகர்களே//
ஜீவா, ஆர்யா, மாதவன், பிருத்விராஜ் எல்லாரும் சிறந்த நடிகர்களா, குட் ஜோக். இவர்களிடம் வார்த்தை உச்சரிப்பையும், வார்த்தைக்கேற்ற உணர்வுகளையும் எந்த படத்தில் பார்த்தீர்கள். தமிழைக் கூட சரியாக பேசத் தெரியாத இவர்கள் எல்லோரும் சிறந்த நடிகர்கள் என்று நீங்கள் கூறி உங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். சூர்யா, பசுபதி இவர்களை வேண்டுமானால் ஓரளவுக்கு நல்ல நடிகர்கள் என சொல்லலாம்.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர்களில் யார் சிறந்தவர் என்று சொல்வதை விட, எந்த கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமானவர்கள் என பார்ப்பதே சரியாக இருக்கும். இன்றைய நிலையில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றவர்கள் என்று யாரையுமே குறிப்பிட்டு சொல்ல முடியாது.
உதாரணத்திற்கு பிதாமகனில் விக்ரம், கஜினியில் சூர்யா, அன்பே சிவத்தில் மாதவன், பூவே உனக்காகவில் விஜய், வாலியில் அஜித் இப்படி அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை வைத்து வேண்டுமானால் சிறந்தவர்கள் என்று குறிப்பிடலாம்.
நன்றி யாழிசை,
நான் கொஞ்சம் ஓடிய படங்களாக பட்டியல் எடுத்தேன். அதில் தெரியாமல் தேசியகீதம் விடுபட்டுவிட்டது. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
//ஜீவா, ஆர்யா, மாதவன், பிருத்விராஜ் எல்லாரும் சிறந்த நடிகர்களா, குட் ஜோக். இவர்களிடம் வார்த்தை உச்சரிப்பையும், வார்த்தைக்கேற்ற உணர்வுகளையும் எந்த படத்தில் பார்த்தீர்கள். தமிழைக் கூட சரியாக பேசத் தெரியாத இவர்கள் எல்லோரும் சிறந்த நடிகர்கள் என்று நீங்கள் கூறி உங்களின் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.//
வார்த்தை உச்சரிப்பென்றால் எப்படி மனோகரா, பராசக்தி மாதிரி பேசனுமா? அப்படி பார்த்தாலும் சேரனுக்கும் அப்படி பேச வராதே. ஜீவா, ஆர்யா, பிருத்துவிராஜ். இந்த மூவருக்கும் தமிழ் தாய் மொழியல்ல. அப்புறம் it is very unforunate that you have not seen movies like கற்றது தமிழ், ராம், அறிந்தும் அறியாமலும், நான் கடவுள், மொழி, கன்னத்தில் முத்தமிட்டால்,தம்பி,அலைபாயுதே.
சேரனுக்கு நீங்கள் பரிந்து பேசுவதில் தப்பில்லை அதற்காக மேற் கூறிய நடிகர்களை விட சேரன் நடிப்பில் சிறத்தவர் என கூறி உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
சேரனுக்கு நீங்கள் பரிந்து பேசுவதில் தப்பில்லை அதற்காக மேற் கூறிய நடிகர்களை விட சேரன் நடிப்பில் சிறத்தவர் என கூறி உங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.//
எந்த இடத்தில் சேரனின் நடிப்பு நான் புகழ்ந்து தள்ளி நீங்கள் பார்த்தீர்கள்.
நீங்கள் குறிப்பிட்ட அத்தனை படத்தையும் நானும் பார்த்தவன்தான்,உங்களுக்கு வேண்டுமானால் அவர்களின் நடிப்பு அந்த படங்களில் கவர்ந்திருக்கலாம். நடிப்பு என்பது தெரியாமல் நடிப்பதுதான் நடிப்பு, அது நீங்கள் குறிப்பிட்ட எந்த படங்களிலும் கிடையாது.
சேரன் இயக்குனர் வேலை பார்த்தல் போதும் ,நடிப்பு அவருக்கு தேவை இல்லை..வராத ஒன்றை ஏன் முயற்சி செய்ய வேண்டும் .........சேரன் ஒரு நடிகன் அல்ல , இயக்குனர் இதை புரித்து கொள்ள வேண்டும் ...
உண்மையை உள்ளதுபடி சொல்லியிருக்கிறீர்கள்..!
எனது நன்றிகள்..!
சேரன் தமிழ்ச் சினிமாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவர்.
இன்றைக்கு கே.பி.யும், பாரதிராஜாவும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் பேசப்படுவதைப் போல நாளைய காலங்களில் பேசப்பட இருப்பவர்களில் சேரனும் ஒருவர்.
அப்போது இன்றைக்கு கோலோச்சும் கமர்ஷியல் சிங்க இயக்குநர்கள் வீட்டில்தான் இருப்பார்கள். அவர்களுடைய பெயரை வெளியில் சொல்வதற்கே ஆள் இருக்காது..!
இருக்கின்றவரையில் நமக்கு நம் பெருமை தெரியாது..
இதுதான் தமிழ்நாடு..!
//இருக்கின்றவரையில் நமக்கு நம் பெருமை தெரியாது..
இதுதான் தமிழ்நாடு..!//
நன்றி உண்மைத் தமிழன், நீங்கள் சொன்ன வார்த்தை ஒவ்வொன்றும் உண்மையானது. பதிவர்கள் சிலரது விமர்சனத்தை படித்துத்ததான் மனம் நொந்து போய் இப்படி ஒரு பதிவை நான் எழுத நேர்ந்தது. அதுவும் திரையுலகத்தில் இருக்கும் சிலரே அப்படிப்பட்ட பதிவுகளை போடும் போது ஆத்திரமாகவும் வருகிறது.
என் பதிவை பாராட்டி விட்டு, நீங்கள் பொக்கிஷ விமர்சனத்தை கிழித்து விட்டீர்களே, அதிலும் நான் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
என் பதிவைப் பார்த்த 1600க்கும் மேற்பட்ட பதிவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியை உரித்தாக்குகிறேன்.
Boss autograph en fav movie, vettri kodikattu, pandavar bumi ellam sema padam.. enna eppo ellam orae mokkaiya eduthutu namma mela kurai sonna eppadi, elasa puthusa pasangala pottu ithai solli irukalam.. prakash raj velli theraiyil adam pudikira mathiri nan than nadipaen nu nadikirathu romba kutham.. athuku directon kavanam seluthi irukalam...
Enna kodumai saravanan ithu nejama nalla padangal vennaila kabadi kulu, naadodigal, subramanipruam, pasanga ellam kondadina jenaga ethai makkal autograph oru varusham ottum pothu inichithu eppo kasakutha
sathiyama nallavae illai, same opinon i had on varanam ayiram but gautam is my fav.. enna seiya unaimya nalla illanu oru rasigan feel seirathu than ellarum mostly feel seiranga.. maya kandai climax thavira sema mokkai...
en thambi mattrum friends padam parthutu sema mail pani iruntha seranukku kiruku pidichithathu nu enna seiya
why most of these different directors run behind ajith, vijay & surya?
for autograph prasanna may be good choice,for 'mayakkannadi' karan also a good choice,like that jeeva,parthiban,prithivirajare also in the industry.or try with some new faces like pasanga,subramanyapuram,v-kabadikulu...directors like seran,ameer pls concentrate only in direction,we cant able to enjoy your films if you are the heros in the same....
kavi.. உங்கள் மெயில் அல்லது தொலைபேசி எண்ணை எனது மெயிலுக்கு அனுப்பவும்.. sankara4@gmail.com
cheran mega star
ஏற்கனவே சுட்ட படம் என்று சொல்லியாச்சு. அதைக் கூட ஒழுங்காக சுட முடியாட்டி? நல்லது நல்லது தான். கெட்டது கெட்டது தான்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கருத்துரையிடுக