அனைவருக்கும் நணப்கர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
நண்பர்கள் என்றவுடனே எனக்கு தொலைந்து போன என் நண்பர்களைப் பற்றித்தான் ஞாபகம் வருகிறது. இன்றைய தலைமுறைக்குப் பிரச்சனையில்லை சிறு வயது முதலே, தொலைபேசி, கைபேசி, ஈமெயில், என பல விதங்களில் தொடர்புப் படுத்திக் கொள்ள வழி இருக்கிறது. ஆனால் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இதெல்லாம் கிடையாது.
எனக்கு ஞாபகம் உள்ள வரையில் என்னுடன் ஐந்தாவது வரை படித்த இரு நண்பர்களைப் பற்றி எப்போதுமே மறக்க முடியாது. ஒருவன் விஜயசங்கர், செங்கல்பட்டு அருகிலுள்ள, சிங்கபெருமாள் கோவிலைச் சேர்ந்தவன், இன்னொருவன் குணசேகர், செங்கல்பட்டைச் சேர்ந்தவன். இவன் இறந்து விட்டதாக பல வருடங்கள் கழித்து தகவல் வந்தது. ஐந்தாவது வகுப்பு வரை நான், விஜயசங்கர், குணசேகர் மூவரும்தான் ஒன்றாக அமர்ந்திருப்போம். என்ன வாங்கி சாப்பிட்டாலும் ஒன்றாகத்தான் சாப்பிடுவோம். அதிகமாக செலவு செய்தது குணசேகராகத்தான் இருக்கும். இவன் இறந்து விட்டான் என்று கேள்விப்பட்ட போது மிகவும் வருத்தமடைந்தேன். விஜயசங்கர் இப்போது எங்கிருக்கிறான் என்றே தெரியாது.
அடுத்து ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை ஒரு பள்ளியில் படித்த போது எட்டாவது வகுப்பில் சுரேந்திரன் என்ற நண்பன் கிடைத்தான். எனக்கும் அவனுக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். படிப்பு, விளையாட்டு, மற்ற விஷயங்கள் என நானும் அவனும் போட்டி போட்டுக் கொண்டே இருப்போம். ஒரு ஆண்டு விழாவில் அவன் பாட இருப்பதைக் கேள்விப்பட்டு நானும் பாட (?) ஆசைப்பட்டு ஒரு பாடலையும் பாடினேன், முதல் முதல் ராக தீபம் ஏற்றும் நேரம்...பாடல் அது. இன்றும் அந்த பாடலை முழுவதுமாகப் பாடுவேன். ஒன்பதாவது வந்த போது அவன் திருக்கழுக்குன்றம் சென்று விட்டதாகத் தகவல். அதன் பின் இரண்டு வருடம் கழித்து பத்தாவது முடித்த பின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அவனை சந்தித்தேன். அதன் பின் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியாது.
பள்ளி இறுதியில் படித்த பல நண்பர்களைப் பற்றிய தகவல் கிடையாது, இன்னும் ஏன் கல்லூரியில் உடன் படித்தவர்களில் ஒரு சிலர்தான் தொடர்பில் இருக்கிறார்கள். மற்றவர்களை பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டது.
திடீரென கடந்த அனைத்தையும் நினைத்துப் பார்ப்பேன், அந்த மறக்க முடியாத நாட்களில் வாழ்ந்த விதமே தனி. சைக்கி்ளில் ஒன்றாகச் செல்வது, கிரிக்கெட் விளையாடியது, கோவில்களில் சுற்றியது, தெருக்களில் விளையாடியது, போன்றவை இன்னும் நெ்ஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய தலைமுறை நண்பர்களைப் பார்த்தால் பொறாமைதான் வருகிறது. இந்த ஈமெயில், கைபேசி எல்லாம் நாங்கள் சிறுவர்களாக இருந்த போது வந்திருக்கக் கூடாதா என்று ?
இவை வந்த பின்னும் நண்பர்களைப் பிரிந்திருந்தால், அது நட்பே கிடையாது.
4 கருத்துகள்:
எல்லோருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பாக இருககும் நண்பரே.
அதை விட கொடுமை இலங்கை நிலைமை. தாய், தந்தை சகோதர, சகோதரிகள்,குழந்தைகள் இன்னும் உயிருடன் இருக்கின்றார்கள என்பதை கூட அறிய முடியாத நிலை.
வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் தொடர்பும் கூட காலப்போக்கில இல்லாமல் போகிறது நண்பரே!
யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழப்பழகினால் வாழ்க்கை வசந்தமாக இனிக்கும்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
அருமையான பகிர்வு நண்பரே.. வாழ்த்துக்கள் தொடர்கிறேன்...
நல்லதொரு நண்பர்கள் தினப்பதிவு.
வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/
Tamil10.com
கருத்துரையிடுக