வியாழன், 28 மே, 2009

திறமையிருந்தும் அழகிருந்தும்


திறமையிருந்தும் அழகிருந்தும் திரையுலகில் சிலரால் சீக்கிரம் ஜொலிக்க முடியாது. சில வருடங்களாவது ஆகி விடும். சிலரைப் பார்க்கும் போது மட்டும் இவர்கள் எப்போது வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவார்கள் எனத் தோன்றும். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் நந்தா. மௌனம் பேசியதே படத்தில் அறிமுகமானவர், முதல் படத்திலேயே யார் இவர் என பார்க்க வைத்தவர். ஆனால் ஏனோ உடனடியாக முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் போய் விட்டார். இதற்கடுத்து இவர் நடித்த புன்னகைப்பூவே படம் கூட ௧00 நாட்கள் ஓடிய படம்தான். கோடம்பாக்கம், அகரம், உற்சாகம், போன்ற படங்களில் நடித்தார். ஈழத்தை மையமாகக் கொண்ட ஆணிவேர் படத்தின் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் மனதில் இடம் பிடித்தார்.


இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடிக்காமல் இருக்கிறாரே என்ற ஒரு வருத்தம் எனக்கு இருந்ததுண்டு. ஆனால் இது விரைவில் தீர்ந்து விடும் என எதிர்பார்க்கலாம். காரணம் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகும் ஈரம், ஆனந்தபுரத்து வீடு ஆகிய இரு படங்களிலும் இவர்தான் கதாநாயகன். இந்த ஆண்டிற்குள் இவரும் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துவிடுவார் என நம்பலாம்.


அவருக்கு இப்போதே நம் வாழத்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

1 கருத்து:

butterfly Surya சொன்னது…

இவரையும் நடிகர் ஷியாமையும் நான் மிகவும் எதிர்பார்த்தேன்.

ஷியாம் தெலுங்கில் வில்லனாகி ஹிட்டாகி விட்டார்.

இவரும் விரைவில் நிறைய வெற்றிகளை பெறுவார்.

வாழ்த்துகள்.