செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சமந்தா புகைப்படங்கள்










விஜய்யின் ‘ஜில்லா’, யார் கட்டப் போறாங்க ‘கல்லா’

தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கப் போகும் படம் ‘ஜில்லா’. விஜய்யை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சூப்பர் குட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இதற்கிடையே இந்த படத்தை அப்படியே மொத்தமாக வாங்க ஜெமினி நிறுவனம் பேசி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தையும் இந்த நிறுவனமே வாங்கியது, படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்து ‘கடல்’ படத்தை வாங்கி கடினப்பட்டு விட்டார்கள். இப்போது விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தை வாங்கி மீண்டும் ‘கல்லா’ கட்ட தயாராகிவிட்டதாகத் தெரிகிறது. முறையான அறிவிப்பு வரும் வரை, பெரிய படங்களுக்கு இப்படி பல தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கும்…பார்ப்போம் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதென்று….

விக்ரமனின் 'நினைத்தது யாரோ' - திரைப்பட முன்னோட்டம்

விக்ரமன் இயக்கத்தில் உருவாகி வரும் நினைத்தது யாரோ திரைப்பட முன்னோட்டம் அபிஷேக் பிலிம்ஸ் சாரபில் பி. ரமேஷ், டி. இமானுவேல் இருவரும் தயாரிக்கிறார்கள். ரிஜித் நாயகனாகவும், நிமிஷா நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மற்றும் பினிஷ், லியோ, கிரி, ரித்விகா, சுபிக்‌ஷா, கார்த்திக் யோகி, அசார், அஸ்வத், சாய்பிரசாத், பிரசாத், பிரதீப், பானு என எல்லோருமே இந்த படத்தில் புதுமுகங்கள் தான். இசை – பால்ராஜ், ஒளிப்பதிவு – ஆர்.கே. பிரதாப், படத்தொகுப்பு – ரிச்சர்ட், கலை – ஜனா, ஸ்டண்ட் – தளபதி தினேஷ், பாடல்கள் – பா.விஜய், கலைக்குமார், வைரபாரதி, தயாரிப்பு மேற்பார்வை – எஸ். அருணாச்சலம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – விக்ரமன். மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்.....

வெள்ளி, 2 டிசம்பர், 2011

போராளி - விமர்சனம்


தயாரிப்பு - கம்பெனி புரொடக்ஷன்ஸ்
எழுத்து, இயக்கம் - சமுத்திரக்கனி
இசை - சுந்தர் சி. பாபு
ஒளிப்திவு - கதிர்
படத்தொகுப்பு - ஏஎல்.ரமேஷ்
பாடல்கள் - நா.முத்துக்குமார், கபிலன், யுகபாரதி
நடிப்பு - சசிகுமார், நரேஷ், சுவாதி, வசுந்தரா, நிவேதா, கஞ்சா கருப்பு மற்றும் பலர்.
வெளியான தேதி - 01-12-2011

நாடோடிகள் படத்தின் வெற்றிக் கூட்டணியான சமுத்திரக்கனி, சசிகுமார், மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.போராளி என்கிற பவர்ஃபுல்லான டைட்டில் , இன உணர்வு சம்பந்தமான படமாக இருக்குமோ என்று எண்ணிதான் படம் பார்க்கச் செல்வோம். ஆனால்.........

மேலும் படிக்க தயவு செய்து கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.
http://www.screen4screen.com/vimarsanam/poraali-review.html

திங்கள், 28 நவம்பர், 2011

தமிழ் ரசிகர்கள் ரசிக்கத் தெரியாதவர்களா ?




தெலுங்கு திரைப்பட உலகில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழ் ரசிகர்களுக்கு திரைப்படங்களை ரசிக்கத் தெரியாது என கூறியிருக்கிறார். பருத்திவீரன் திரைப்படம் மூலம் இவரையும் நாம் கதாநாயகனாக ஏற்றுக் கொண்டதை மறந்து விட்டார் போலும்...

அந்த வீடியோவின் லிங்க் இதோ....

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YcboqAeojt0

ஞாயிறு, 18 ஜூலை, 2010

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதை



விஜய் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படம் சென்ற வாரம் விமரிசையாக ஆரம்பமானது. மீண்டும் ரீமேக் கதையையே படமாக்க இருக்கிறார் ராஜா. 2000ம் ஆண்டு திருப்பதிசாமி இயக்கி நாகார்ஜுனா, சௌந்தர்யா , ரகுவரன் நடித்த ஆசாத் திரைப்படத்தின் தழுவல் மாற்றுதான் வேலாயுதம் படத்தின் கதை.

தெலுங்கு ஆசாத் படத்தின் கதை இதோ.

சௌந்தர்யா ஒரு பத்திரிக்கையாளர். மாபியா கும்பல் தலைவரான ரகுவரனால் கொடுமைக்கு ஆளானவர். ரகுவரன் ஒரு தீவிரமன இந்து பக்தர். பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பகவத்கீதை கருத்துக்களை பரப்புபவர். ஒரு முறை பல ரவுடிகள் விபத்தில் இறந்து கிடப்பதை சௌந்தர்யா பார்க்க நேரிடுகிறது. ரகுவரனின் கொட்டத்தை அடக்குவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைக்கிறார். அதனால் ஆசாத் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி அவர்தான் இந்த ரவுடிகளை அழித்தவர் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பரவ ஆரம்பிக்கிறது. மேலும் ஆசாத் என்ற கதாபாத்திரத்தை பிரபலமாக்குகிறார் சௌந்தர்யா. நாகார்ஜுனா கிராமத்தில் வயதான அம்மா, அழகான தங்கையுடன் வசிப்பவர். அவருடைய தங்கைக்கு திருமணம் நிச்சயமானதால் , சீட்டு நிறுவனத்தில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுப்பதற்கு பட்டணத்திற்கு வருகிறார். அங்கு நடக்கும் சில விஷயங்கள் நாகார்ஜுனாதான் ஆசாத் என தவறுதலாக புரிய வைக்கிறது. சௌந்தர்யா, நாகார்ஜுனாவை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்கிறார். ஆனால் ஆசாத்தாக தன்னால் இருக்க முடியாது என மறுக்கிறார் நாகார்ஜுனா. இந்த சூழ்நிலையில் சீட்டு நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம் எனத் தெரிய வருகிறது. இதன் பின் நாகார்ஜுனா ஆசாத்தாக மாறி எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

தமிழில், நாகார்ஜுனா கதாபாத்திரத்தில் விஜய்யும், சௌந்தர்யா கதாபாத்திரத்தில் ஜெனிலியாவும், நடிக்கிறார்கள்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

ராவண ரகசியம் !


உலக சினிமா ரசிகர்களால் பரபரப்பாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ராவணன், ராவண் திரைப்படங்கள் இப்படி ஏமாற்றிவிடும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஜுன் 18ல் வெளியான இப்படத்தின் இந்திப் பதிப்பு முதல் வாரத்திலேயே 20 கோடி வசூல் செய்ததாக மீடியாவில் பரபரப்பைக் கிளப்பினார்கள். ஆனால் அடுத்த வாரங்களில் நடந்த கதையே வேறு. இப்படி ஒரு இறங்கு முகம் ஏற்படும் என நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

ராவண் வெளியான முதல் வாரத்தில் வசூலித்த தொகை 20 கோடிக்கு மேல். இரண்டாவது வாரம் வசூலித்த தொகை 2 கோடியே 70 லட்சம், ஜுலை 8 ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாவது வாரத்தில் வசூலித்த தொகை 22 லட்சம் மட்டுமே.

ராவணன் வெளியான முதல் வாரத்தில் சென்னையில் மட்டும் வசூலித்த தொகை 2 கோடிக்கு மேல், இரண்டாவது வாரத்தில் வசூலித்த தொகை 54 லட்சம், மூன்றாவது வாரத்தில் வசூலித்த தொகை 17 லட்சம் மட்டுமே.

10 ரூபாய் முதல் போட்டு 12 ரூபாய் சம்பாதிப்பது லாபமா, இல்லை 1000 ரூபாய் முதல் போட்டு 1002 ரூபாய் சம்பாதிப்பது லாபமா ?