செவ்வாய், 12 பிப்ரவரி, 2013
விஜய்யின் ‘ஜில்லா’, யார் கட்டப் போறாங்க ‘கல்லா’
தலைவா’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கப் போகும் படம் ‘ஜில்லா’. விஜய்யை வைத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சூப்பர் குட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
இதற்கிடையே இந்த படத்தை அப்படியே மொத்தமாக வாங்க ஜெமினி நிறுவனம் பேசி வருவதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தையும் இந்த நிறுவனமே வாங்கியது, படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்து ‘கடல்’ படத்தை வாங்கி கடினப்பட்டு விட்டார்கள்.
இப்போது விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தை வாங்கி மீண்டும் ‘கல்லா’ கட்ட தயாராகிவிட்டதாகத் தெரிகிறது.
முறையான அறிவிப்பு வரும் வரை, பெரிய படங்களுக்கு இப்படி பல தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கும்…பார்ப்போம் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறதென்று….
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக