இளையராஜா என்ற ஒரு மாபெரும் இசைக் கலைஞனைப் பற்றிய பேச்சு இப்போது பரவலாக எழுந்துள்ளது. அது தேவையில்லாத ஒன்றுதான் என்றாலும் அந்த மாபெரும் கலைஞனைப் பற்றி மக்களிடத்தில் மீண்டும் ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆஸ்கர் விருதை வென்று வந்த ஆஸ்கர் நாயகனான ஏஆர் ரகுமானே, நேற்று இளையராஜாவைப் பற்றி பேசும் போது அவர் ஆஸ்கர் விருதுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற நிதர்சனமான உண்மையைக் கூறியதே இதற்குச் சான்று.
அன்னக்கிளி தொடங்கி நான் கடவுள் வரை இளையராஜா அவர்களின் இசைப்பயணத்தில் நாம் பயணம் செய்து கொண்டிருக்கும் விதம் ஒரு சுகமானது. எத்தனை ஆயிரம் பாடல்கள், எப்படிப்பட்ட பின்னணி இசை, ஓய்வு இல்லாமல் கூட அவர் உழைத்த காலங்கள், அவருக்காகவே தவம் கிடந்தவர்கள், அவருடைய இனிமையான பாடல்களால் பேரையும் புகழையும் வாங்கியவர்கள், என இப்படி பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அன்னக்கிளி, பதினாறு வயதினிலே, கவிக்குயில், புவனா ஒரு கேள்விக்குறி, ப்ரியா, சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், முள்ளும் மலரும், இளமை ஊஞ்சலாடுகிறது, கல்யாணராமன், தர்மயுத்தம், அன்பே சங்கீதா, உதிரிப்பூக்கள், உல்லாசப் பறவைகள், நிழல்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூடுபனி, ராஜ பார்வை, அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா, பயணங்கள் முடிவதில்லை, மூன்றாம் பிறை , மெட்டி, காதல் ஓவியம், தங்கமகன், அடுத்தவாரிசு, மண்வாசனை, தம்பிக்கு எந்த ஊரு, சிந்து பைரவி, கீதாஞ்சலி, இதயக்கோயில், புன்னகை மன்னன், அம்மன் கோவில் கிழக்காலே, கடலோரக் கவிதைகள், மௌனராகம், எங்க ஊரு பாட்டுக்காரன், நாயகன், அக்னி நட்சத்திரம், வருஷம் பதினாறு, வெற்றி விழா, கரகாட்டக்காரன், கேளடி கண்மணி, ஈரமான ரோஜாவே, தளபதி, சின்ன தம்பி, என் ராசாவின் மனசிலே, இதயம், தேவர் மகன், செம்பருத்தி, எஜமான், மறுபடியும், மகாநதி, சிறைச்சாலை, காதலுக்கு மரியாதை, வீரா, சேது, ப்ரண்ட்ஸ், காசி, அழகி, பிதாமகன், விருமாண்டி, நான் கடவுள், என எனக்கு ஞாபகம் வந்த சில திரைப்படங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளேன். இவை இளையராஜாவின் இனிய இசைக்கு எடுத்துக்காட்டு.
இசையையும், இளையராஜாவையும் ரசிப்பவர்கள் என்னுடைய இந்த சிறிய கருத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
2 கருத்துகள்:
இளையராஜா ஒரு மேதை என்பதை ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் அவரது காலம் முடிந்து விட்டது.
ஒவ்வொரு கலைஞனுக்கும் உச்சியில் இருக்கும் காலமும், சறுக்கி வரும் காலமும் கண்டிப்பாக உண்டு. இது காலத்தின் கட்டாயம்.
தேவையில்லாமல் கலைஞர்களை ஒப்பீடு செய்வது தவறு.
ராஜா ஒரு மிகச்சிறந்த இசை மேதை..
ரஹ்மானும் தான்.
இருவராலும் தமிழுக்கு பெருமை.
எல்லா புகழும் இறைவனுக்கே..
கருத்துரையிடுக