ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்றாலும் ஆயிரம் ஆயிரம் ரசிகர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் எங்களின் இசைஞானி இளையராஜா என்றுமே ராஜாதான். அவருடைய இசையும் பாடல்களும் விருதுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவை. அவருடைய இசைக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கிறது. அதை யாராலும் மாற்றவும் முடியாது மாற்றி விடவும் முடியாது. இன்று திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேருக்கு அவருடைய இசையும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை. அவருடைய பாடல்களுக்காகவே ஓடிய எத்தனையோ திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அவராலேயே வெற்றி பெற்று இன்று பேர் பெற்ற எத்தனையோ பேர் அதை மறந்து விட முடியாது. எழுத வேண்டும் என்பதற்காக என்னென்னவோ எழுதுபவர்களைப் பற்றி என்னைப் போன்ற ராஜாவின் ரசிகர்கள் ஒரு போதும் கவலைப்படப் போவதில்லை.
விருதுகள் மட்டுமே ஒருவரின் திறமைக்கு அளவுகோல் அல்ல என்பதை யாராலும் மறுக்க முடியாது.
ஏஆர்.ரகுமான் அவர்களுக்கு கிடைத்த விருதுகளுக்காக நாம் நிச்சயம் அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அவருடைய சாதனைகளில் இதுவும் ஒரு மணிமகுடம்தான் இன்னும் பல விருதுகள் கிடைக்க அவரை வாழ்த்துவோம்.
3 கருத்துகள்:
அந்திமழை ஒன்றேபோதும் ராஜாவின் இசைத் திறமைக்கு. இன்னமும் அந்த வயலின் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
நன்றி பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது, அன்னக்கிளி முதல் நான் கடவுள் வரை எழுத வேண்டியிருக்கும்
இளையராஜாவின் இசைத்திறமையை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. அவருக்கு விருது கிடைக்காததற்குக் காரணம்... சரியான முறையில்... சரியான வழியில் கொண்டு செல்லப்படாததுதான்.
அதே நேரத்தில் ரகுமானின் கடின உழைப்பையும் இசைத்திறமையையும் குறைத்துச் சொல்ல முடியாது.
இருவருமே இசை மேதைகள். பெருமைக்கு உரியவர்கள்.
கருத்துரையிடுக