புதன், 15 ஜூலை, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு - விமர்சனம்


படத்தோட ஸ்டில்சும் , படத்தைப் பத்தின டிரைலரும், விளம்பரமும், அதோட டைட்டில்ல இருந்து எல்லாமே கொஞ்சம் அச்சப்பட (அதாவது பயப்பட) வச்சாலும், பயமில்லாம படத்தைப் பார்த்துட்டு வரலாம்.


அமெரிக்கா , நியூ ஜெர்சியில இருக்கிற அழகான குடும்பமான பிரசன்னா, சினேகா தம்பதியர் வீட்டுல நடக்கிற விஷயங்கள்தான் படத்தோட கதை. இன்னும் விரிவா சொன்னால் நல்லா இருக்காது. சொல்ல வந்த விஷயத்தை , பாடல்கள், தேவையில்லாத காட்சிகள், சண்டைகள், நகைச்சுவைங்கற பெயர்ல கடிகள்னு இல்லாம தெளிவா கொடுத்திருக்காரு அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதன்.


பிரசன்னா, சினேகா ஜோடி ரொம்ப பொருத்தமா இருக்கு. இரண்டு பேருமே அழகா இருக்காங்க, அழகாவும் நடிச்சிருக்காங்க. ஒரு வீடு, ஆபிஸ் இங்க மட்டுமே நடக்கிற கதைதான், கொஞ்சம் சுவாரசியத்தை குறைச்சிடுது. இருந்தாலும் வழக்கமான தமிழ் சினிமா பார்க்கிற பீலிங் இல்லாம இருக்கு. அதுக்கு அமெரிக்காவுல கதை நடக்கிறதும் காரணமா இருக்கலாம்.


அங்கங்க சின்ன சின்ன பாடல்கள் வருது. கார்த்திக்ராஜா இசை அருமையாவே இருக்கு. ரெட் (அஜித் காமிரா இல்லீங்க ? ) காமிராவுல ஷுட் பண்ணி வந்திருக்கிற முதல் தமிழ் படம்.


படத்தோட கடைசியில சொல்ற தகவலைப் பார்த்தால் ஆச்சரியமாவும், அதிர்ச்சியாவும் இருக்கு. எது எதுலயோ முதல் இடத்துல இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனால் அதுல முதல் இடமா ? பயமாத்தான் இருக்கு.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனால் படத்தை ரசிக்கலாம்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தேடுதல் சொன்னது…

படமா அது. படம் ஆரம்பிச்சு ஒரு இருவது நிமிடம் கூட உக்கார முடியல. இத கடைசி கிளைமாக்ஸ் வரை பார்த்து விமரிசனம் எழுதுறதுக்கு கண்டிப்பா ஸ்பெசல் பிறவியா இருக்கனும்.

பெயரில்லா சொன்னது…

உண்மையான கருத்துக்கு நன்றி அண்ணே.அது எனக்கு உற்சாக டானிக்